Sunday, January 27, 2008

என்னவென்பது?

நாடு விட்டு நாடு வந்து
வீடு மறந்து உறவு மறந்து!
நடை மாற்றீ மொழி மாற்றீ
உடை மாற்றீ உணவு மாற்றீ
நான் என்னையே மாற்றீ!

நான் பெற்றது
நான் இழந்ததற்கு ஈடா?
நான் பெற்றதுதான் என்ன?

எதர்கிந்த மாற்றம்
இதை
தியாகம் என்பதா?
மோகம் என்பதா?

Saturday, January 19, 2008

அவளின் புன்னகை

சுட்டெரிக்கும் சூரியனும் குளிர்ந்துவிடும்
அவளின் புன்னகை மழையில் நனைந்தால்!



அவளின் சிரிப்பு

சிரிப்பு பலரின் சிறப்பு
சிரிப்பின் சிறப்பு நீ!

Sunday, January 13, 2008

நீ வீதீ உலா போனால்!


என் தேவதை போனால் வீதீ உலா
அவளை காண நிலா
கண் அடித்து கொண்டு நட்சத்திரங்கள்
கண் சிமிட்டாமல் பார்க்கும் கிரகங்கள்
பரந்த கைகளை விரித்து அழைக்கும் வானம்
இவற்றை மறைத்து கொண்டு பார்க்கும் மேகம்

உயரத்தில் இருக்கும் மமதையோ
தரை இறங்கி வாருங்கள்
பார்த்துவிடுவோம் நீங்களா நானா?